முகப்புUSD / HKD • நாணயம்
add
USD / HKD
முந்தைய குளோசிங்
7.79
சந்தைச் செய்திகள்
அமெரிக்க டாலர் குறித்த விவரங்கள்
அமெரிக்க டாலர் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகும். இது பொதுவாக மற்றைய சில நாடுகளின் டாலர்களுடன் வேறு படுத்திக் காட்டுவதற்காக $, அல்லது USD அல்லது US$ எனக் குறிக்கப்படும். ஓர் அமெரிக்க டாலர் 100 சதம் ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் டாலர் நாணயம் ஜூலை 6, 1785 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1995 இல் கையிருப்பிலிருந்த $380 பில்லியன் டாலர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே புழங்கின. 2005 இல் கையிருப்பிலிருந்த பணம் இரண்டு மடங்காக $760 பில்லியனாக அதிகரித்தது. Wikipediaஹாங்காங் டாலர் குறித்த விவரங்கள்
ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி, சுருக்கக்குறி: ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது நிலையில் உள்ளது. ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.
அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும். Wikipedia